போலீசாரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை

போலீசாரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை
விசாரணை
கள்ளச்சாராயம் பாதிப்பு சம்பவம் குறித்து, போலீசாரிடம் ஒரு நபர் ஆணைய குழு விசாரணையை துவங்கியது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 68 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரசின் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் தலைமையில் ஒரு நபர் குழு ஆணையம் விசாரித்து வருகிறது.அதில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோரிடம் விசாரணை முடித்த நிலையில், தற்போது, சம்பவத்தின் போது கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் பணியில் இருந்த போலீசார் 80 பேரிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு தினசரி 10 பேர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நேற்று 10 பேரிடம் விசாரணை துவங்கியது. அதில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல்கள் தெரியுமா? தகவல் தெரிந்த நிலையில் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளச்சாராய விற்பனை குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏதேனும் தகவல் அளித்தீர்களா? கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை என்ன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை செய்தார்.
Next Story