ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்

ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
யாகம்
பாதுார் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 10:30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் கொட்டப்பட்டது.பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலை மற்றும் புடவைகள், வளையல்களை யை யாக குண்டத்தில் சாற்றினர். தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story