காங்கேயத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

காங்கேயத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு
காங்கேயத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
காங்கேயம் ஒன்றியம், நகர திமுக பொது உறுப்பினர்கள் செயற்குழு கூட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே கட்சிப் பணிகள் செய்வது, கட்சி கொடி கம்பம் நிறுவுவது, முன்னாள் தலைவருக்கு விழா நிகழ்ச்சிகள் நடத்துவது, திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு அளித்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது. புதிய உறுப்பினர்கள் திமுக கட்சியில் சேர்ப்பது, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது உள்ளிட்ட கட்சி பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், அவரவர் பூத்துகளில் உள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கேயம் நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் ரவி , மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், இளைஞரணி சக்தி வடிவேல் ஒன்றிய நகர கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story