விமன் இந்தியா மூவ்மெண்ட் நகர செயற்குழு கூட்டம்
Tirunelveli King 24x7 |3 Sep 2024 5:42 AM GMT
விமன் இந்தியா மூவ்மெண்ட்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயற்குழு கூட்டம் விம் நகர தலைவர் ஹமீதா தலைமையில் நேற்று ஏர்வாடியில் வைத்து நடைபெற்றது. இதில் துணை செயலாளர் ஜெசிமா வரவேற்று பேசினார். நகர பொருளாளர் பாத்திமா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் வருகின்ற செம்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து செல்வதோடு ஆசிரியர்களோடு இணைந்து மாணவ செல்வங்களுக்கு கல்வி விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சி நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்ட்டது. மேலும் வருகின்ற வருகின்ற 11-09-24 அன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே போதை ஒழிப்பு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதில் விம் நகர செயற்குழு உறுப்பினர்கள் ஜஹானா, இரஃபானா, பர்ஹானா, பர்வீன், ராசியா, சைபுநிஷா, ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயலாளர் ஜன்னத் நன்றி கூறினார்
Next Story