வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
Andippatti King 24x7 |3 Sep 2024 6:08 AM GMT
அணை நீர்மட்டம் 63.32 அடி. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 399 கன அடியாக இருந்தது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டதுபெரியாறு பிரதான கால்வாயின் கீழ் மதுரை, திண்டுக்கல்,ராமநாதபுரம் சிவகங்கை தேனி ஆகிய மாவட்டத்தில் இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு ஜூலை 3ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 45 நாட்களுக்கு முழுமையான அளவில் நீர் வெளியேற்றப்பட்ட பின் 75 நாட்களுக்கு முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும். ஆகஸ்ட் 27ல் அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 63.32 அடி. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 399 கன அடியாக இருந்தது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம் போல் வினாடிக்கு 69கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story