ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சி சார்பில்  உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் உறுப்பினராக சுப.நாகராஜன் சேர்க்கப்பட்டு அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவின் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், நகர் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் கார்த்திக், மாவட்ட பட்டியல் அணி தலைவர் நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story