செங்கல்பட்டில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரம் அகற்றம்
Thiruporur King 24x7 |3 Sep 2024 10:08 AM GMT
செங்கல்பட்டில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரத்தை ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அகற்றம்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மசூதி வளாகத்தில் சுமார் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த தூங்கு மூஞ்சு காட்டுவா மரம் இருந்து வருகின்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தை சுற்றி பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திருமண மண்டபங்கள் உள்ளது செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகங்களும் அதே போல் செங்கல்பட்டில் மதுராந்தகம் செல்ல வேண்டும் என்றாலும் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்றாலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் வழியாக தான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு மிக முக்கிய மாக இருந்து வரும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் வாகனமும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வரும். இந்த பழைமை வாய்ந்த மரகிளைகள் அடிக்கடி உடைந்து வாகன ஓட்டிகள் மீது பொதுமக்கள் மீதும் விழுந்து தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது இந்த பழைமை வாய்ந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பருவ மழை துவங்க சில மாதங்களே உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு நெடுஞ்சாலை அதிகாரிகள் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர் ஐந்து ராட்சத மரம் அறுக்கும் இயந்திரம், பத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ராட்சத கிரேன் உதவியுடன் மரத்தை அதிரடியாக மரத்தை கயிறு கட்டியும் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு முழுமையாக அகற்றினர். இதனால் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story