பாலாற்று படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
Thiruporur King 24x7 |3 Sep 2024 10:13 AM GMT
பாலாற்று படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் வில்லியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், 5, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிகபடியாக நெல் பயிரிடப்படும் வில்லியம்பாக்கம் பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் இன்று பாலாற்று படுகை விவசாய சங்க தலைவர் தனசேகரன் தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஏகாம்பரம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வில்லியம்பாக்கம், பாலூர், சாஸ்திரம் பாக்கம், கொங்கணஞ்சேரி, ஆத்தூர் , குருவின் மேடு உள்ளிட்ட பத்திருக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து தங்களது நெற்பயிர்களை கொண்டு வரலாம் என பாலாற்று படுகை விவசாய சங்கம் சார்பில் தெரிவித்தனர்...
Next Story