ராசிபுரம் அருகே மின்சார கசைவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து விபத்து.
Rasipuram King 24x7 |3 Sep 2024 10:15 AM GMT
ராசிபுரம் அருகே மின்சார கசைவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து விபத்து.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த வாமுனி(61) என்பவர் தனியாக வசித்து வரும் நிலையில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் தனது வீட்டை காலையில் பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் மதியம் அவரது வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு குடிசை வீடு எரிந்து தீப்பற்றி உள்ளது.அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட்கள் மற்றும் துணி அனைத்தும் தீயில் எறிந்ததால் கூலி தொழிலாளி பொருட்கள் இன்றி பரிதவித்தார்.
Next Story