ராமநாதபுரம் புதிய ரோந்து வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
Ramanathapuram King 24x7 |3 Sep 2024 12:44 PM GMT
பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், வீடியோ கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகளை மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக ராமநாதபுரம் நகரில் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில் MNVR Mobile Network Video Recorderகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் தானாக அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யும். மேற்படி வாகனம் GPS speciality மூலம் வாகனம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். பல வாகன கேமராக்களை ஒருங்கிணைத்து இணை சேவை மூலம் ஒரு கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்து, மேற்படி வாகனம் குற்ற நிகழ்விடத்திற்கு சென்றுள்ளதா என சோதனை செய்ய முடியும், இந்த கேமராக்களில் பொறுத்தப்பட்டுள்ள தகவல் சேமிப்பு கருவி (Hard Disk) சேதமடையாது, இந்த கேமராக்கள் மூலமாக இரவு நேர நிகழ்வுகளை தெளிவாக பதிவு செய்யலாம். மேற்படி கேமராக்கள் பொறுத்தப்பட்ட 03 ரோந்து வாகனங்களை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் செந்தீஷ், அவர்களால் தொடங்கி வைத்தார்.
Next Story