கபிலர்மலை வட்டாரம் வெங்கரையில் இரத்த தானம் முகாம்.

X
Paramathi Velur King 24x7 |3 Sept 2024 6:43 PM ISTகபிலர்மலை வட்டாரம் வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.03:- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சியில் உள்ள கபிலர்மலை வட்டாரத்திற்க்கு உட்பட்ட வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 25 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார்,வினோத் பாபு,ஏங்கல்ஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
