தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதை முன்னிட்டு தாராபுரத்தில் போலீசார் துப்பாக்கியுடன் விடிய விடிய ரோந்து பணி
Dharapuram King 24x7 |3 Sep 2024 1:32 PM GMT
தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதை முன்னிட்டு தாராபுரத்தில் போலீசார் துப்பாக்கியுடன் விடிய விடிய ரோந்து பணி
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதை முன்னிட்டு தாராபுரத்தில் போலீசார் துப்பாக்கியுடன் விடிய விடிய ரோந்து பணி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தும் கைகளில் கடப்பாரை மற்றும் கத்திகளை வைத்துக்கொண்டு வீட்டை கொள்ளையடிக்க நோட்டமிட்டனர். அன்று அதிகாலை சுமார் 3 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் முருகேஷ் மகேஸ்வரி தம்பதியரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும் அறை பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கேயம் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கிவிட்டு ஏழு வீடுகளில் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை சரக டிஐஜி சரவண சுந்தர், ஆலோசனைப்படி திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பேரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டனர். தாராபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமாக 25-போலீசார் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர். விஜயசாராதி 4-ஆய்வாளர்கள், 14-உதவி ஆய்வாளர்கள், உட்பட 72-காவலர்கள் கை துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம், கண்டைனர் லாரி ஆகியவற்றில் செல்லும் நபர்களையும் மேலும் அவர்களது வாகனத்தில் ஆயுதங்கள் வைத்துள்ளனரா என போலீசார். சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளான தாராபுரம் பேருந்து நிலையம், அமராவதி ரவுண்டானா, கணபதிபாளையம் பிரிவு, அலங்கியம் ரோடு ,உடுமலை ரோடு, புறவழிச்சாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல அலங்கியம், குண்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கு இடமான நபர்களை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு. இதனைத் தொடர்ந்து.போலீசாரின் இரவு ரோந்து பணி துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story