தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.  திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ஈரோடு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ மான விடியல் சேகர் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அளித்து கூட்டத்தில் பேசியதாவது .கடந்த மாதம் 10 தேதி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சட்டமன்ற தொகுதிக்கு 5ஆயிரம் புதிய உறுப்பினர்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நகரம் ,வட்டாரம் வார்டுவாரியாக உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கை பணி 45 நாட்களுக்கு நடைபெறும் .தழிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு12 லட்சம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உறுப்பினர்  உறுப்பினர் சேர்க்கை பணிமுடிவடைந்ததும் கட்சிக்கு நகர, வட்டார நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் .2026 வரை சட்டமன்றத் தேர்தலில் தீவிர பணியாற்றும் வகையில் இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு விடியல் சேகர் பேசினார் கூட்டத்தில் நகரத் தலைவர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.கே நடராஜ் ,மாவட்ட நிர்வாகிகள் ரத்தினசபாவதி ,டாக்டர் ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.
Next Story