தாராபுரம் மூலனூர் மற்றும் குண்டடம் ஆகய ஒன்றிய பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்பட்டது

தாராபுரம் மூலனூர் மற்றும் குண்டடம் ஆகய ஒன்றிய பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்பட்டது
தாராபுரம் மூலனூர் மற்றும் குண்டடம் ஆகய ஒன்றிய பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்பட்டது
தாராபுரம் மூலனூர் மற்றும் குண்டடம் ஆகய ஒன்றிய பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி தாராபுரம் மேற்கு, கிழக்கு தெற்கு, குண்டடம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்று எங்கள் மூலனூர் தெற்கு ஒன்றியம் ஆகிய 6 ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக கழக உறுப்பினர்களுக்கும் சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், ருத்ராவதி, மூலனூர், கன்னிவாடி ஆகிய 5 பேரூராட்சிகளை சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான C.மகேந்திரன் நேற்று உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் P.K. ராஜ், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி, மாவட்ட கழக இணைச் செயலாளர் மாவட்ட சேர்மன் சத்தியபாமா, தலைமை செயற்குழு உறுப்பினர் ரேவதிகுமார், ஒன்றிய கழக செயலாளர்கள் குண்டடம் மேற்கு செந்தில்குமார், குண்டடம் கிழக்கு சோமசுந்தரம், தாராபுரம் மேற்கு பாலகுமாரன், தாராபுரம் தெற்கு ரமேஷ், தாராபுரம் கிழக்கு செல்வகுமார், மூலனூர் தெற்கு ராஜரத்தினம், நகர கழக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி கழக செயலாளர்கள் ருத்ராவதி தமிழரசன், கன்னிவாடி லட்சுமனசாமி, மூலனூர் வெற்றிவேல், கொளத்துப்பாளையம் பைப் ரவி (எ) ரவிச்சந்திரன், சின்னக்காம்பாளையம் சுகன்குமார், சார்பு அணி மாவட்ட செயலாளர் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மகேஷ்குமார், குண்டடம் ஒன்றிய குழு தலைவர் குப்புச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அலங்கியம் APS.செல்வி,ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக்கழக, வார்டு கழக செயலாளர்கள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story