நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
Dindigul King 24x7 |3 Sep 2024 3:21 PM GMT
திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்ததால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டுக்கல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பல வருடங்களாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செங்கல் மணல், எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைத்து வியாபாரம் மற்றும் கரும்புச்சாறு, உள்ளிட்ட பல்வேறு வகையான பழக்கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மூலம் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருபவர்களை போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாலும் நெடுஞ்சாலைத்துறை இடம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகும் இடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி தொடர்ந்து தபால் அனுப்பிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றாததால் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் எனக் கூறி திண்டுக்கல் திருச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் 10 நாட்கள் அவகாசம் கேட்டதால் பத்து நாட்கள் அவகாசம் தரப்படுவதாகும் அதற்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் காவல்துறை உதவியுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவோம் எனக்கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சென்றனர். மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது முறையாக பதிலளிக்காமல் நழுவிச் சென்றனர்.
Next Story