ஆசிரியர் நல சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
Dindigul King 24x7 |3 Sep 2024 3:33 PM GMT
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர். அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மாதந்தோறும் ரூ.497 புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பாலிசி தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்.204ன் படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதாக அரசிடம் ஒப்பந்தம் போட்டுள்ள யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், எம்.டி. இந்தியா மற்றும் மெடிக்கல் அசிஸ்ட்டெண்ட் என்ற தனியார் கம்பெனிகளிடம் இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் ஓய்வூதியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செலவு செய்யும் முழுத் தொகையினையும் வழங்காமல் 20 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை மட்டுமே வழங்குகின்றன. எனவே, இம்முறைகேட்டினை களைந்து திழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாணை எண்.204ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகையினை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்திட்டத்தை தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்த முன்வரவேண்டுமென கோரிக்கைகளை வலியுறத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் ஜெயசீலன் துவக்கவரையாற்றினார். மாவட்டச்செயலாளர் அமல்ராஜ், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்டத்தலைவர் சுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் சிறைவுரையாற்றனார். பொன்ராஜ் நன்றி கூறினார்.
Next Story