சவுடு மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு : உறவினர்கள் சாலையில் உள்ள உடலை கட்டி பிடித்து கதறல்
Tiruvallur King 24x7 |3 Sep 2024 3:41 PM GMT
திருவள்ளூர் அருகே சவுடு மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு : உரிய நீதி கிடைக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என உறவினர்கள் சாலையில் உள்ள உடலை கட்டி பிடித்து கதறல்
திருவள்ளூர் அருகே சவுடு.மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு : உரிய நீதி கிடைக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என உறவினர்கள் சாலையில் உள்ள உடலை கட்டி பிடித்து கதறல் திருவள்ளுர் அடுத்த சிற்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 35வயதான வினோத்குமார் இவருக்கு திருமணம் ஆகி அனுசியா என்ற தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார், இளைஞர் வினோத்குமார் சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் தினந்தோறும் சிற்றதத்தூர் பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு இருசக்கர வாகன மூலம் பயணித்து இருசக்கர வாகனத்தை ரயில்வே நிலைய இருசக்கர வாகன நிறுத்தமிடத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டு வந்துள்ளார் இந்த நிலையில் வழக்கம்போல் தனது சொந்த கிராமமான சிற்றத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் அம்பத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருக்கும்போது தண்ணீர்குளம் அடுத்த தண்டலம் பகுதியில் பின்னால் வந்த சவடு மண் லாரி அதிவேகமாக மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வினோத்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இதனை அறிந்த தண்டலம் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர் இருப்பினும் லாரி ஓட்டுனர் தப்பிச்சென்ற நிலையில் வினோத்குமாரின் உறவினர்கள் சாலையிலேயே உயிரிழந்த வினோத்குமாரின் உடலைக் கண்டு கதறி அழுத காட்சி காண்போரின் கண்களிலும் கண்ணீரை வர வைப்பதாக இருந்தது மேலும் வினோத்குமாரின் உயிரிழப்புக்கு மண் குவாரி உரிமையாளர்கள் உரிய பதில் சொல்லும் வரை வினோத்குமாரின் உடலை சாலையில் இருந்து எடுக்க விடமாட்டோம் என அவரது உறவினர்கள் வினோத்குமாரின் உடலை கட்டிப்பிடித்தும் தலையில் அடித்து கொண்டும் அழுத பரிதாபம் அரங்கேறியது திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளின் மூலம் சாலை பணிக்காகவும் வணிக ரீதியாவும் அரசு மண் குவாரிகளில் இருந்து மண் ஏற்றி செல்லும் லாரிகள் அதிக வேகத்துடன் அதிக பாரத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது திருவள்ளூர் மாவட்டத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது எனவே அளவுக்கு அதிகமாக மண் அள்ளும் கனிம வள கொள்ளையர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மண் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும்போது லாரிகள் செல்லும் பாதையை மக்கள் அதிகம் பயன்படுத்தாத பாதையாக பார்த்து அனுமதி வழங்க வேண்டும் எனவும் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுபவர்கள் மேலும் லாரிகளை அதிக வேகத்துடன் இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சமீபத்தில் சவுடு மண் லாரி மோதி திருப்பாச்சூர் பகுதியில் பெண் உயிரிழந்த நிலையில் தற்போது சவுடு மண் லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சிற்றத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story