கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலில் கூலி தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
Tiruvallur King 24x7 |3 Sep 2024 3:51 PM GMT
பெரியபாளையம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலில் கூலி தொழிலாளி விஷமருந்தி தற்கொலை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கடன் திருப்பி கேட்டு தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தல்
பெரியபாளையம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலில் கூலி தொழிலாளி விஷமருந்தி தற்கொலை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கடன் திருப்பி கேட்டு தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தல். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பழங்குடியினர் காலனி சேர்ந்தவர் வேலு (31). கூலி தொழிலாளியான இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும் 3மகள்களும் உள்ளனர். இவரும், இவரது மனைவியும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மல்லிகை தோட்டங்களில் பூப்பறிக்கும் வேலை செய்து வந்துள்ளனர். கூலி தொழிலாளியான வேலு கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரிக்கம்பேடு பகுதி சேர்ந்த அறிவழகன் என்பவரிடம் தோட்ட வேலை செய்வதற்காக முன் பணமாக ரூ.20000 வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் அறிவழகன் தோட்டத்தில் மல்லிகை பூ பறித்து கொடுக்கும் வேலை செய்த வேலு அவ்வப்போது தான் வாங்கிய கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வேலு அறிவழகன் தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அறிவழகன் வேலு வீட்டிற்கு வந்து தோட்டத்திற்கு வேலைக்கு வருமாறும் அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி 20,000 செலுத்துமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வேலுவை அறிவழகன் தாக்கியதாக தெரிகிறது. கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் வேலு கடந்த 27ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து வேலுவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேலு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பெரியபாளையம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கூலி தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய அறிவழகனை கைது செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான நபரை கைது செய்யாமல் சடலத்தை பெற்று கொள்ள முடியாது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story