கந்தம்பாளைம் வார சந்தையில் மினி ஆட்டோவை திருடிச்சென்ற இருவர் கைது.
Paramathi Velur King 24x7 |3 Sep 2024 4:02 PM GMT
பரமத்தி வேலூர் வட்டம் கந்தம்பாளையத்தில் மினி ஆட்டோவை திருடிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்,செப்.03: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கலப்பம்பாடியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் முனிராஜ் (40) அவரது சகோதரர்கள் ஆனந்தகுமார்,ராமச்சந்திரன் ஆகியோர் பூச்செடி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்செடி வியாபரம் செய்வதற்காக அவரது மினி ஆட்டோவில் கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பூச்செடிகளை இறக்கி வைத்து விட்டு அவரது தந்தை மற்றும் சகோதரர்களை இங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு மீதி பூச்செடிகளை கந்தம்பாளையம் வாரச்சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். மாலை 4 மணியளவில் டீ குடிப்பதற்காக மினி ஆட்டோவை நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மினி ஆட்டோவை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த முனிராஜ் கத்தம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சப்இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் வாகனத்தை தேடிவந்தனர். இந்த நிலையில் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் சந்தையில் இன்று மினி ஆட்டோவை சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் கொட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் சரவணன் (30),நாமக்கல் மாவட்டம் நல்லூர் இந்திராநகரைச் சேர்ந்த இலகுடியான் மகன் வேங்கையன் (39) ஆகியோர் மினி ஆட்டோவை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நல்லூர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story