ஆண்டிபட்டி அருகே அம்மாச்சியாபுரத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
Andippatti King 24x7 |3 Sep 2024 4:20 PM GMT
குன்னூர், திருமலாபுரம், கோவில்பட்டி, ரங்கசமுத்திரம், ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாள அட்டை வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அம்மாச்சியாபுரம் கிராமத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமாகிய T.R. N.வரதராஜன் தலைமையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் அதிமுகவின் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னூர், திருமலாபுரம், கோவில்பட்டி, ரங்கசமுத்திரம் ஊராட்சிகளில் உள்ள கிளை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் அடையாள அட்டையை கிளைச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் மதியரசன்,கிழக்கு ஒன்றிய பொருளாளர் R P லோகநாதன்,அம்மா பேரவை ஒன்றிய துணைத் தலைவர் A ஜெயராமன், M G R மன்ற ஒன்றிய செயலாளர்T R S மணிகண்டன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் P ராஜபாண்டி ,ரங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story