நாமக்கல் அருகே பள்ளி மாணவா் உயிரிழந்த விவகாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நீதி கேட்டு போராட்டம்!
Namakkal King 24x7 |3 Sep 2024 5:31 PM GMT
சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் பத்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் முன்னிலை வகித்தார்.
நாமக்கல் மாவட்டம், வரகூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் கு.பத்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தார்.சமூக நீதி வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார், பத்து ரூபாய் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சி.பாலசுப்ரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பத்து ரூபாய் இயக்கம் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். இதில், கடந்த சில தினங்களுக்கு முன் வரகூா் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகாஷ், வகுப்பறையில் மற்றொரு மாணவரால் மரணம் அடைந்ததை கண்டித்தும், மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்காமலும், மாணவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல் அலட்சியம் காட்டிய, வரகூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆா்ப்பாட்டத்தில், வாகன ஓட்டுநா்கள், வரகூா் பகுதி மக்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Next Story