விருத்தாசலத்தில் அண்ணன் குத்தி கொலை
Virudhachalam King 24x7 |3 Sep 2024 6:20 PM GMT
தம்பி கைது
விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் முதல் தாரத்து மகன் செல்வமணி (58),. கட்டிட மேஸ்திரி. இவரது தம்பி சுப்பிரமணியன் (வயது 55). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் சீனிவாசனின் இரண்டாம் தாரத்தின் மகன் ஆவார். இன்று இரவு சுப்ரமணியனுக்கும், அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சனை நடந்துள்ளது. இது குறித்து அறிந்த செல்வமணி சண்டையை விளக்குவதற்காக சென்று உள்ளார். அப்போது செல்வமணியை சுப்பிரமணியன் தாக்கியுள்ளார். இதில் செல்வமணி நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த செல்வமணியின் மனைவி ஜோதி சென்று கேட்டபோது ஜோதியையும் தாக்கியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தனது அண்ணன் செல்வமணியை, அவரது மனைவி ஜோதியின் கண் முன்னே, கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த செல்வமணி மயங்கி கிடந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இறந்ததாக தகவல் கிடைத்த செல்வமணியின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து செல்வமணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் செல்வமணி பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story