இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு நடந்தது
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட கஸ்பா தெருவில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிக்குமார், கண்ணகி, சித்ரா, ராஜேந்திரன், தனமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக நகர தலைவர் சங்கர், திமுக பாலு, செந்தில், சேட்டு, முரளி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா தெரு மக்களுக்கு குடியிருக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். அப்பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை தனி நபர் உரிமை கொண்டாடுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். கஸ்பா தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை மீட்டு தெருப்பாதையாக அகலப்படுத்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் உதயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாவட்ட குழு ஐயப்பன், நகரச் செயலாளர் ராஜசேகர், பீர்முகமது, பிரகாஷ், ஜெயபால், பானுமதி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story