விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
Virudhachalam King 24x7 |3 Sep 2024 6:24 PM GMT
விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது
விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர் மற்றும் மங்கலம்பேட்டை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் வழிபடும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று கடல்நீர் மற்றும் ஆற்றுநீரில் கலக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 7 ஆம் தேதி வருவதை முன்னிட்டு விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், திட்டக்குடி அந்தோணி ராஜ், வேப்பூர் மணிகண்டன், விருத்தாசலம் டிஎஸ்பி கிரியா சக்தி, திட்டக்குடி டிஎஸ்பி மோகன் நேர்முக உதவியாளர் செல்வமணி, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விருத்தாசலம், பெண்ணாடம் மற்றும் மங்கலம்பேட்டை வேப்பூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலை அமைப்பாளர்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காவல்துறை அனுமதி தந்துள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். அனுமதித்த நேரங்களில் மட்டுமே சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். அரசியல் மற்றும் மத ரீதியான அடையாளங்கள் உள்ள பேனர்கள் அருகில் வைக்கக்கூடாது. அனுமதித்த அளவு உயரம் உள்ள சிலைகள் மட்டும் தயாரிக்க வேண்டும். அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு தினம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிலை பராமரிப்பாளர்கள் உடன் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படாமல் வகையில் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் படி நடந்து கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி நடத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாக்களை சேர்ந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட பல துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story