விக்கிரவாண்டியில் அமைதி கூட்டம்: கிராம மக்கள் புறக்கணிப்பு

விக்கிரவாண்டியில் அமைதி கூட்டம்: கிராம மக்கள் புறக்கணிப்பு
அமைதி கூட்டம்: கிராம மக்கள் புறக்கணிப்பு
விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி வி.சி.,கொடி கம்பம் நட்டபோது பிரச்னை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன.இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் தாசில்தார் யுவராஜ் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு ஆஜராகி இருந்த நிலையில், திடீரென கூட்டத்திற்கு சம்மன் அனுப்பாத வி.சி.,யின் நிர்வாகிகள் கூடினர்.இதனைப் பார்த்த கிராம மக்கள், தேவையில்லாமல் வெளியூர் நபர்கள் தலையிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி விடுவார்கள் எனக் கூறி அ.தி.மு.க., மாணிக்கவேல் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். அதன் பிறகு கூட்டத்திற்கு சம்மன் அனுப்பியவர்கள் மட்டும் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறிய பிறகு வி.சி., தரப்பில் சம்மனில் இல்லாதவர்கள் வெளியேறினர்.பிறகு மீண்டும் கிராம மக்களை பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்தபோது, வேறு நாளில் கூட்டம் நடத்துங்கள் என கூறியதால் அமைதிக் கூட்டம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு தாசில்தார் யுவராஜ் மாற்றி பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story