கல்பட்டு ஊராட்சியில் அரசு கட்டடம் திறப்பு விழா நடந்தது.

X
காணை ஒன்றியம், கல்பட்டு ஊராட்சியில் அரசு கட்டடம் திறப்பு விழா நடந்தது.காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணைச் சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தார்.கல்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 8.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டடம், பள்ளி சுற்று சுவர் ஆகியவற்றை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், ஆர்.பி.முருகன், பி.டி.ஓ.,கள் சிவக்குமார், சீனுவாசன், வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் மேத்யு, தலைமை ஆசிரியர் மங்களம், ஊராட்சி தலைவர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

