நெல்லையில் தடகள போட்டிகள் தொடக்கம்

நெல்லையில் தடகள போட்டிகள் தொடக்கம்
தடகள போட்டிகள் துவக்கம்
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் திருநெல்வேலி குறு வட்ட அளவிலான தடகள போட்டிகள் துவக்க விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நேஙநடைபெற்றது. இந்த விழாவிற்கு திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை அழகு ராஜன் முன்னிலை வகித்தார். சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் குறு வட்ட செயலாளர் முனைவர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணா சக்கரவர்த்தி ஒலிம்பிக் கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மானூர் யூனியன் தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றி வைத்து தடகள போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தை சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வமணி பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மாரியம்மாள் ஆகியோர் ஏற்றி வைத்தனர். சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் காந்திமதி உறுதிமொழி வாசித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன் நன்றி உரையாற்றினார்.இந்த விளையாட்டு போட்டியில் 50 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story