ஆண்டிபட்டி அருகே கணவன் காணவில்லை என மனைவி புகார்
Andippatti King 24x7 |4 Sep 2024 2:33 AM GMT
சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் காணவில்லை என மனைவி விஜயலட்சுமி புகார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சேடப்பட்டி என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் பாலமுருகன் ( 47), ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு மனைவி,இரு மகன்கள் உள்ளனர். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி இவர் தையல் வேலை செய்து வருகிறார். பாலமுருகன் கடந்த 2024 பிப்., 5ல் ஆட்டோ ஓட்ட சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி விஜயலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story