காரையூரில் புதிய நியாய விலை கடை திறப்பு!
Pudukkottai King 24x7 |4 Sep 2024 3:11 AM GMT
நிகழ்வுகள்
பொன்னமராவதி வட்டம், அரசமலை கூட்டுறவு கடன் சங்கத்தின் காரையூரில் புதிய நியாயவிலை. கடை திறப்பு விழா மற்றும் 3 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவுக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று புதிய நியாயவிலைக் கடைடை திறந்து வைத்தார். மேலும், வருவாட மற்றும் பேரிடர் மேலாண்மை. துறையின் பயனாளிகளுக்கு சார்பில் வீட்டுமனைப்பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ஆர்.ரம்யாதேவி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, ஒன்றியக்குழு அடைக்கலமணி, பொன்னமராவதி தலைவர் பேரூராட்சித்தலைவர் சுதா சுந்தரி அழகப்பன், கூட்டுறவு சார்-பதிவாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story