ரேஷன் அரிசி கடத்தல், விற்பனையாளர் சஸ்பெண்ட்

ரேஷன் அரிசி கடத்தல், விற்பனையாளர் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்
சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலாகியது. இதுகுறித்து பொதுவிநியோக திட்ட மாவட்ட துணை பதிவாளர் சுரேஷ் தலைமையில் முதுநிலை ஆய்வாளர் மணிகண்டன், கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன், குடிமைப் பொருள் தனி தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்காரம் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர்.அதில், விற்பனையாளர் சத்தியமூர்த்தி, ரேஷன் பொருட்கள் விற்பனையில் முறைகேடு செய்து அரிசி மூட்டைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன், ரேஷன்கடை விற்பனையாளர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அவரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
Next Story