தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
கூட்டம்
ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மணலுார்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர் துரை பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாரதிதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று, வரும் 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி மீண்டும் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது குறித்தும் பேசி அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் செல்விரேணு, கார்த்திகேயன், ரமேஷ், பொருளாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story