பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்

பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
யாகம்
கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் ஆவணி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு நிகும்பலா யாகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி, பத்ரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை, ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடத்தப்பட்டது. கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ர காளி கவசம் பாடி, மிளகாய் வற்றல் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாகம் நடத்தினர். சிறிதும் நெடியின்றி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story