கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக லாபகரமான கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. கள்ளை ஊராட்சியில் நடந்த 6 நாள் பயிற்சியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 6வது நாள் பயிற்சியின் கடைசி நாள் அன்று வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமை வகித்து பல்வேறு தொழில் நுட்பங்களை அளித்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் வழங்கினார். இதில் லாபகரமான முறையில் கறவை மாடு வளர்ப்பிற்கான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் அறிவியல் மையத்தில் கால்நடை வளர்ப்புகளுக்கான அளித்து வரும் பயிற்சிகள், தொழில் முனைவோராக வருவது எப்படி, கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள், கறவை மாடு இனங்கள், இதனை கையாளும் முறைகள் மற்றும் அதன் உற்பத்தி திறன்கள், கொட்டகை அமைப்பு முறைகள், இனப்பெருக்க மேலாண்மை, கன்று ஈனும் போது மாட்டினை பராமரித்தல், கன்று குட்டி பராமரிப்பு, சுத்தமான பால் கறக்கும் முறைகள் குறித்து பல்வேறு தொழில் நுட்பங்கள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனிருத் உழவர் உற்பத்தியாளர் உறுப்பினர்கள் 25 நபர்ககுள்கு சான்றுகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ்செல்வி, கவியரசு, திருமுருகன், மாலதி, கால்நடை மருத்துவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்தனர்.
Next Story