பசுமை தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற அறிய வாய்ப்பு
Sivagangai King 24x7 |4 Sep 2024 7:52 AM GMT
சிவகங்கை பசுமை தொழில் முனைவோர்கள் “பசுமை தொழில் முனைவு திட்டத்தின்” கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், பசுமை தொழில் முனைவோர்கள் “பசுமை தொழில் முனைவு திட்டத்தில்” தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பித்து பயன்பெறலாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்படுத்த பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த “பசுமை தொழில் முனைவு திட்டம் ” உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றிட சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்திடல் வேண்டும். மேலும், தனிநபர் தொழில் நிறுவனம் செயல்பாடு (கட்டாயம் MSME/UDYAM) பதிவு மற்றும் குழு அல்லது தொகுப்பு நிறுவன செயல்பாடு (கட்டாயம் MSME/UDYAM மற்றும் FSSAI) பதிவு பெற்றிருத்தல் வேண்டும். மேலும், நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் தரச் சான்று (MSME/Udhyog adhar /FSSAI) பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு வகை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, தேர்வு செய்யப்படும் தொழில் அல்லது தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் (TNSRLM /EMS) கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளோர் வருகின்ற 09.09.2024 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தினை பெற்று, விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story