மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்கள் தீர்த்த குடம்

இரத்தினம் பிள்ளை புதூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் ஊராட்சி இரத்தினம் பிள்ளை புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மாணிக்க மலையான், ஸ்ரீ பிடாரியம்மன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை 8.15 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதை ஒட்டி இன்று அப்பகுதி பக்தர்கள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்த குடங்கள் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் சென்றனர்.
Next Story