அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி.
Maduranthakam King 24x7 |4 Sep 2024 8:46 AM GMT
அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி.
செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டுதலின்படி,இலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக கழகத்திற்குட்பட்ட செய்யூர் டவுன் கிளை கழகத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்யூர் டவுன் கிளைக் கழகத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் என்.மனோகரன் இணைச் செயலாளர் வார்டு உறுப்பினர் கௌரி பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் இலத்தூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் ஆர்.வீரமுத்து எம்ஜிஆர் இளைஞர் அணியின் செயலாளர்சி.ஆர்.செந்தமிழ்செல்வன்,இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் முகையூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்.குமார்,இலக்கிய அணியின் ஒன்றிய செயலாளர் மாரியப்பன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அனிதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரண்யசித்தி மதியழகன், தேவராஜபுரம் கிளைக் கழகச் செயலாளர் திருப்பதி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story