சூரசம்ஹாரம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Sivagangai King 24x7 |4 Sep 2024 10:12 AM GMT
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கஜமுக சூரசம்ஹாரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு கற்பக விநாயகர் நடத்திய கஜமுக சூரசம்ஹாரத்தை சிவாச்சாரியார்கள் நிகழ்த்த பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஆக.29ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும்,இரவில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் திருவீதி வலமும் நடக்கிறது. நேற்று ஆறாம் திருநாளை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு உற்ஸவ விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் கோயில் கிழக்கு ராஜகோபுர மண்டபம் எழுந்தருளினார். மூலவர் சன்னதியில் பூஜிக்கப்பட்ட தந்தம் உற்ஸவரிடம் ஒப்படைக்கப்பட்டது.தொடர்ந்து சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை நடத்தி தீபாராதனை நடந்தது. பின்னர் சூரனை சந்திக்க விநாயகர் புறப்பாடு துவங்கியது.கோயில் குளத்தின் வடகரையில் யானை முகத்தில் இருந்த சூரனை தந்தத்தால் தலையை கொய்து கஜமுக சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார். தொடர்ந்து சூரனை மூஷிகமாக்கி அதில் எழுந்தருளினார். செப்.6 மாலையில் தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும் செப்.7 ல் காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
Next Story