ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |4 Sep 2024 10:15 AM GMT
திருவாடானை அருகே ஶ்ரீ ஆதினமிளகி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
Lராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோடனூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனுக்ஞை விக்னேஸ்வரர் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ச்சியாக நேற்று காலை 3 கால யாகசாலை பூஜைகளும் மாலையில் பூர்ணாஹுதி, தீப ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோ பூஜை நாடி சந்தானம் நடைபெற்றது. பின்னர் மகா பூர்ணாகதி தீபாரதனை தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் உள்ள கடம் புறப்பாடு செய்து கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கும்பாபிஷேகத்தை கான சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
Next Story