கார்மெண்ட்ஸ் கூலி தொழிலாளி தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயம்

X
Komarapalayam King 24x7 |4 Sept 2024 3:58 PM ISTகுமாரபாளையத்தில் கார்மெண்ட்ஸ் கூலி தொழிலாளி தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் வசிப்பவர் சதீஷ், 30, கார்மெண்ட்ஸ் நிறுவன கூலி. இவர் ஆக. 31ல் இரவு 08:30 மணியளவில் சென்னையில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு போவதாக கூறி சென்றார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் சென்னையில் உள்ள மகள் வீட்டில் கேட்டதற்கு, அங்கு வரவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்வதாக மொபைல் போனில் செய்தி அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும் வீட்டில் பார்த்த போது, ஒரு நோட்டில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். இது குறித்து இவரது தகப்பனார் முரளி, 58, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் காணாமல் போன சதீஷ் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
