தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மதுராந்தகம் தாலுக்கா மாநாடு
Maduranthakam King 24x7 |4 Sep 2024 11:22 AM GMT
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மதுராந்தகம் தாலுக்கா மாநாடு நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மதுராந்தகம் தாலுக்கா மாநாடு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளராக மாநிலத் தலைவர் வெள்ளைசாமி டிக் பைபர் எம்.டி. தணிகைவேல் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி டிக் பைபர் பற்றி தலைமை எடுத்துள்ள முடிவுகளை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் எடுத்துரைத்தார். மற்றும் கட்டண சேனல்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கௌரவ தலைவர் சரஸ்வதி ஸ்டீபன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் முருகன் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கண்ணன் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் குப்பன் உள்ளிட்ட மதுராந்தகம் தாலுகாவில் உள்ள தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story