தொழிலாளர் நலத்துறை சார்பில் இணைய வழி சேவைகள் மேம்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

தொழிலாளர் நலத்துறை சார்பில் இணைய வழி சேவைகள் மேம்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்
விருத்தாசலத்தில் நடந்தது
தொழிலாளர் நலத்துறை சார்பில் இணைய வழி சேவைகள் மேம்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது. விருத்தாசலம் தொழிலாளர் துணை ஆய்வாளர் மோதிலால் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இணைய வழி சேவைகள் பயன்படுத்தும் போது வர்த்தகர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் மற்றும் இணைய வழி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் உதவியாளர் ராமகிருஷ்ணன், விருத்தாசலம் வர்த்தகர் சங்கம், ஹோட்டல் உரிமையாளர் சங்கம் மற்றும் எடையளவு விற்பனையாளர்கள், பழுது பார்ப்பவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story