சுபான்ராவ்பேட்டை பள்ளியில் மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு.
Arani King 24x7 |4 Sep 2024 1:25 PM GMT
ஆரணி, செப் 4. ஆரணி அடுத்த சுப்பான்ராவ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆரணி அடுத்த சுப்பான்ராவ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நிகழச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.வேலன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரிமுரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாந்தி வரவேற்றார். பள்ளியில் படித்த சாந்தலட்சுமிசுரேஷ் மேலாண்மைக்குழு தலைவராகவும், செல்வி வேலாயுதம் துணைத்தலைவராகவும் மற்றும் 22 பேர் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.ஆனந்தன், மல்லிகாம்மா, அப்பகுதியை சேர்ந்த உஷா, முருகன், ஆனந்தன், ரவி, குபேரன், சேதுபதி, மோகன், சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story