விசிக மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
Maduranthakam King 24x7 |4 Sep 2024 1:44 PM GMT
விசிக மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.துணை பொது செயலாளர் எழில் கரோலின் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் நூர்ஜகான், துணை செயலாளர் சிற்றரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஷாநவாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் பொன்னிவளவன் கலந்து கொண்டு பேசுகையில் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 7000 பெண்களை பங்கேற்க செய்வது போதை ஒழிப்பு குறித்த நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்துவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கினார். இதில் விசிக நிர்வாகிகள் விஜயகுமார், ராஜபாரதி, அம்பேத்கர்,பித்தன், சம்பத், வீரா, உதயா, சீனு,தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Next Story