விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செப்டம்பர் மாதம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகள்
Virudhachalam King 24x7 |4 Sep 2024 6:01 PM GMT
திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செப்டம்பர் மாதம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகின்ற 6 ந் தேதி பூ விழுந்தக நல்லூரில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சியும், 10 ந் தேதி இலங்கியனூர் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த பயிற்சியும், 11ந் தேதி வாழைக் கொள்ளை கிராமத்தில் நெற்பயிரில் களை மற்றும் நீர் மேலாண்மை பயிற்சியும், 12 ந் தேதி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் குறித்த பயிற்சியும், நடைபெற உள்ளது. 13 ந் தேதி மணியம் புதூர் கிராமத்தில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் அதே 13 ஆம் தேதி அன்று தக்காளியில் மதிப்பு கூட்டுதல் பயிற்சியும், 17ந் தேதி ராமாபுரம் கிராமத்தில் வாழையில் உர மேலாண்மை குறித்த பயிற்சியும், 18ந் தேதி தொழுதூர் கிராமத்தில் மக்காச்சோளத்தில் உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 19 ந் தேதி தெம்மூர் கிராமத்தில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடைபெற உள்ளது. இதே போல வருகின்ற 20 ந் தேதி குமாரமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நானோ ரிவைவ், ரைய்ல் புளூம் குறித்த செயல் விளக்க பயிற்சியும், 21ந் தேதி பரிவளாகம் கிராமத்திலும், 23ந் தேதி சிறுகளூர் கிராமத்திலும் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 26ந் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நீரில் கரையும் உரங்கள் குறித்த பயிற்சியும், 27 ஆம் தேதி கொண்ட சமுத்திரம் கிராமத்தில் மணிலாவில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், அதே 27ஆம் தேதி கத்தாழை கிராமத்தில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இணை உணவு தயாரித்தல் குறித்த பயிற்சியும், 30ந் தேதி வடமூர் கிராமத்தில் உளுந்து பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று தொழில்நுட்ப பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story