திருச்சி - கோவை அதிவேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ் - குழந்தை அறுவை சிகிச்சைக்கு இடமாற்றம் - காங்கேயம் வழியாக காவல் துறை வாகனங்களின் உதவியுடன் சென்றது.
Tiruppur King 24x7 |5 Sep 2024 12:41 AM GMT
காங்கேயம் காவல் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் திருச்சியில் இருந்து குழந்தை ஒன்று இருதய அறுவை சிகிச்சைக்கு செல்வதாகவும் அதனால் 3 பக்கம் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை ஒத்துழைப்புடன் ஆம்புலன்ஸ் கடந்து சென்ற காட்சி காங்கேயம் பகுதி பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள ரவுண்டானாவில் உள்ள சிக்னல் 3 பாக்களும் நிறுத்தப்பட்டு ஒரு பக்கம் கரூர் - கோவை சாலைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த சிக்னலில் உள்ள காவலர் மற்ற 3 பகுதியில் சிக்னலுக்கு காத்திருந்தா வாகன ஓட்டிகளிடம் திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு பிறந்த 7 நாட்களான பெண் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றப்படுவதாகவும் அதற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு காத்திருந்தனர். வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் மேற்பார்வையில் கரூர் மாவட்ட எல்லையில் இருந்து அந்த அம்புலன்ஸ்க்கு உதவியாக 3 காவல்துறை வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவனாசிபாளையம் வரை காவல்துறை வாகனங்களின் பாதுகாப்பில் பிறந்த ஏலே நாட்கள் ஆன பெண் குழந்தை டெம்போ ட்ராவலர் ஆம்புலன்ஸ் வேனில் அதிவேகத்தில் பறந்து சென்றது. சிறு பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்ற காவல்துறையினர் உதவியுடனும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறிது நேரம் காத்திருந்தனர். மேலும் இந்த பகுதியை சில மணித்துளிகளில் வானங்கள் சைரன் சத்தம் எழுப்பிக் கொண்டு மின்னல் வேகத்தில் கடந்து சென்றதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மெய்சிலிர்த்து போனார்கள். மேலும் காவல் பணியில் ஈடுபடுவது மட்டும் இல்லாமல் உயிர்களை காப்பாற்றும் பணிகளிலும் காவல்துறையினரின் செயல்பாடுகள் உள்ளதை பார்க்கும் பொதுமக்கள் காக்கிக்குள்ளும் ஈரம் உள்ளது என தெரிவித்து சென்றனர்.
Next Story