கோனாபுரம் பிரிவு அருகே இருசக்கர வாகனம் மற்றும் அரசு பேருந்தின் பின்பக்க டயர் தீ தீ விபத்து. விபத்து காரணமாக எரிந்து சேதம் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

கோனாபுரம் பிரிவு அருகே இருசக்கர வாகனம் மற்றும் அரசு பேருந்தின் பின்பக்க டயர் தீ தீ விபத்து. விபத்து காரணமாக எரிந்து சேதம் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
கோனாபுரம் பிரிவு அருகே இருசக்கர வாகனம் மற்றும் அரசு பேருந்தின் பின்பக்க டயர் தீ தீ விபத்து. விபத்து காரணமாக எரிந்து சேதம் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் லாரியை முந்தி செல்ல முன்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் இவர் திருப்பூர் நோக்கி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதிகாலை 3:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோனாபுரம் பிரிவு அருகே விறகு கட்டை ஏற்றுக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதமாக லாரியின் பின்பக்கத்தில் இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சரவணன் கீழே விழுந்தார். கீழே விழுந்தது உடன் இரு சக்கர வாகனம் சாலையில் உரசி தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதற்குப் பின்னால் தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் விடாமல் ஓரமாக செல்ல முயன்ற ஓட்டுநர் பாண்டி முயற்சி செய்தார் இருப்பினும் இருசக்கர வாகனம் தீ எரிந்து கொண்டு பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கிக்கொண்டது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்தின் பின்பக்கம் உள்ள டயர் முழுவதும் முற்றிலுமாக தெரிந்து சேதமானது. இதனை அறிந்த பேருந்தின் பயணிகள் 25 பேர் அலறியடித்து வெளியே தப்பி ஓடினர். கோனாபுரம் பிரிவு அருகே விபத்து நடைபெற்ற போது அருகில் இருந்த தோட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பேருந்தில் வந்த பொதுமக்கள் குடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர் இருப்பினும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதன் பிறகு தாராபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை அடித்து பேருந்தில் பின்பக்க சக்கரத்தில் உள்ள தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் சிறு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story