தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குவதில் குளறுபடி

தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குவதில் குளறுபடி
தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குவதில் குளறுபடி
தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குவதில் குளறுபடி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்குவதற்காக மானிய விலையில் ராணிப்பேட்டை யில் இருந்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்குவதற்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தென்னங்கன்றுகளை கண் ஒன்றுக்கு 65 ரூபாய்க்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றனர். இவ்வாறு விவசாயிகளுக்கு மானிய விலையான 65 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்படும் நிலையில் விவசாயிகளுக்கு விரைவில் அனைத்து தென்னங்கன்றுகளையும் விற்பனை செய்தால் போதும் என்ற அடிப்படையில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் தென்னங்கன்றுகளுக்கு எந்த விதமான அடங்கலோ, சிட்டா,பட்டா என எதுவும் பெறாமலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு உரிய ரசீது வழங்காமலும் தோட்டக்கலைத் துறையில் விற்பனை செய்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு வாங்கப்படும் தென்னங்கன்றுகள் மரத்தை வைத்து பராமரித்து சரியான முறையில் காய்கள் பிடிக்கவில்லை என்றால் இங்கு தான் தென்னங்கன்று வாங்கினோம் என்பதற்கு எந்த விதமான அத்தாட்சியும் இல்லாமல் இருக்கிறது இதனால் தென்னம் கன்றுகளை வாங்கிச் சென்று நட்டு வளர்த்து பராமரித்து பிறகு தென்னங்காய்கள் பிடிக்கவில்லை என்றால் தென்னங்கன்றுகள் எங்கு யாரிடம் வாங்கினோம் என்பது தெரியாமல் போய்விடும் இதனால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் தென்னங்கன்றுகளுக்கு தென்னங்கன்று இந்த விவசாயிகளுக்கு தான் வழங்கினோம் என ரசீது கொடுக்க வேண்டும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story