சாலை ஓரங்களில் இறந்து போன நாட்டுக்கோழிகளை பண்ணை கோழி வளர்ப்பார்கள் வீசிச் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
Dharapuram King 24x7 |5 Sep 2024 2:16 AM GMT
சாலை ஓரங்களில் இறந்து போன நாட்டுக்கோழிகளை பண்ணை கோழி வளர்ப்பார்கள் வீசிச் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
சாலை ஓரங்களில் இறந்து போன நாட்டுக்கோழிகளை பண்ணை கோழி வளர்ப்பார்கள் வீசிச் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்களில் விவசாயிகள் கோழிப்பண்ணை அமைத்து கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி என இரண்டு வகைகளாக கோழி பண்ணை அமைத்து கோழிகளை வளர்த்து வருகின்றனர். விவசாயிகள் தோட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தொற்றால் இறக்கும் கோழிகளை தினம் தோறும் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர். குறிப்பாக தூரம்பாடி முதல் பாரக்கடை செல்லும் சாலை ஓரத்தில் தற்போது கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி என்று அழைக்கப்படும் கோழிகளை சாலை ஓரத்தில் பண்ணை உரிமையாளர்கள் கொட்டி வருகின்றனர். சாலை ஓரங்களில் இறந்த கோழிகளை வீசி வருவதால் அந்த இறந்த கோழிகள் துர்நாற்றம் வீசுவதுடன் விவசாய தோட்டங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக வளர்க்கப்படும் நாய்கள் சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை கடித்து கொதறி இன்று வருகிறது ஒரு சில நேரங்களில் இந்த இறைச்சி கழிவுகள் கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் மாட்டு கன்றுகளை கடித்து வருகிறது குறிப்பாக கடந்த வாரத்தில் கருப்பன் வலசு என்ற கிராமத்தில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று குவித்து வருகிறது சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் மேலும் சாலை ஓரங்களில் கோழி பண்ணைகளில் இருந்து சாலை ஓரங்களில் இறந்த கோழிகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளை சென்று ஆய்வு செய்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முறையாக இறந்த கோழிகளை பாதுகாப்பாக சோக் பிட் அடிப்படையில் இறந்த கோழிகளை முறையாக பராமரிக்கிறார்களா இல்லை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எவ்வாறு இறந்த கோழிகளை பராமரிக்கின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுகாதாரத் துறையினர் கோழி பண்ணைகளில் ஆய்வு செய்து இறந்த கோழிகளை சாலைகளில் வீசப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கால்நடை வளர்ப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது இதுகுறித்து விவசாயி கூறுகையில் முன்பெல்லாம் ஆடு மாடுகளை பாதுகாப்பதற்காக நாய்களை வளர்த்து வந்த காலம் போய்விட்டது தற்போது சாலையோரங்களில் கொட்டப்படும் இறந்த கோழிகளை தின்ற நாய்கள் இறைச்சிக் கழிவுகள் கிடைக்காத நேரத்தில் தாங்கள் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை கடித்து கொன்றும் வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இது மட்டுமன்றி சாலை ஓரங்களில் இறந்த கோழிகளை உணவாக உட்கொள்ளும் காகம் மற்றும் கழுகு போன்ற உயிரினங்கள் ஆடு, மாடு குடிக்கும் தண்ணீரில் அந்த கழிவுகளை போட்டு செல்கிறது இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஆடு மாடுகளுக்கு ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story