கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை கௌரவித்த ஆட்சியர்!

கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை கௌரவித்த  ஆட்சியர்!
39-வது தேசிய கண் தான இரு வார விழாவினை முன்னிட்டு கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கௌரவித்தார்.
தூத்துக்குடி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (4.09.2024) மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கண் வங்கி, இணைந்து நடத்திய 39-வது தேசிய கண் தான இரு வார விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்திற்க்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவிதத்தாவது: பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தூத்துக்குடி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் வங்கி இணைந்து நடத்தும் 39-வது தேசிய கண் தான இரு வார விழாவிற்கு முன்னிலை வகிக்ககூடிய இந்த மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் கு.சிவகுமார் அவர்களே , இங்கு வருகை புரிந்து விழாவை கவனித்து வரக்கூடிய மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.பத்மநாதன் அவர்களே, துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி.குமரன் அவர்களே, இந்த கண்தான விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள இணை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ம.ரீட்டா ஹெப்சிராணி அவர்களே, இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ள உறைவிட மருத்துவ அலுவலர் ஜெ.சைலஸ் ஜெயமணி அவர்களே, மற்றும் நிகழ்வில் பங்கேற்றுள்ள மருத்துவர்களே, பயிற்சி மருத்துவர்களே, இந்நிகழ்வில் கடந்த ஆண்டு கண்தானம் செய்து பல நபர்களுக்கு கண் பார்வை கிடைக்க செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களே, அவர்களே, மற்றும் பொதுமக்களே அனைவருக்கும் வணக்கம். கண்புரை கருவி சிகிச்சை மற்றும் கண்தானம் பெற்று அதன் மூலமாக பார்வையை மீட்டு தரும் அறுவை சிகிச்சைகளை நமது மருத்துவமனை செய்ய வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கக்கூடிய ழிhவாயடஅழடழபளைவ துறை கண் வங்கியை சிறப்பாக செயல்படுத்தி 120 பேருக்கு கண் பார்வையை மீட்டு கொடுத்துள்ளது. உண்மையாக நாம் யாருக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால்120 பேருக்கு கண்களை தானமாக கொடுத்து இறந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு நபரும் இறந்து போகும்போது அந்த குடும்பத்தில் உள்ள தனிநபர் துக்கம் என்பது அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த கண்ணை தானம் செய்யலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அந்த துயரத்தையும் கடந்து தனது குடும்ப உறுப்பினர்கள் இறந்த பிறகும் கண் வாழட்டும் யாரோ ஒருவர் கண் பார்வை பெறட்டும் என நினைக்கிறார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் இல்லையென்றால் நிச்சயமாக இந்த 120 பெயருக்கு கண் பார்வை கிடைத்திருக்காது. இது போன்ற நிகழ்வுகள் மூலமாக மென்மேலும் கண்தானம் விழிப்புணர்வு அதிகமாகும். மேலும் கடந்த ஆண்டு 120 கண்களை தனமாக பெற்றுள்ளோம் என்றால் அடுத்த ஆண்டு இதைவிட அதிகமாக கண்களை தானமாக பெறுவதற்கான நிகழ்வாக இது இருக்கவேண்டும். நான் நிகழ்ச்சி வருவதற்கு முன் மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அதிக கண்தானம் செய்யப்படுகிறது எனக் கேட்டேன். இது குறித்து அதிகாரிகள் பிறகு கூறுவதாக தெரிவித்தனர். அடுத்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறும் போது மாநில அளவில் மிக அதிக அளவில் கண்தானம் செய்யப்பட்ட மாவட்டமாக தூத்துக்குடி இருக்க வேண்டும். கண்தானம் செய்ய நம்முழு முயற்சி செய்ய வேண்டும். அதற்கான என்னென்ன விழிப்புணர்வு திட்டங்களை ஏற்படுத்த வேண்டுமோ அனைத்தையும் மாவட்ட முழுவதும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கின்றது. இந்த கண்தானம் மூலம் கண்பார்வை பெற்ற நபர்கள் கண்தானம் தொடர்பாக விழிப்புணர்வை மற்றவர்களுக்கு செய்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு ஊடகங்கள் வழியாக சொல்வதன் மூலமாக நாம் இறந்த பிறகு செய்யும் தானத்தின் மூலமாக யாரோ ஒருவர் பலனடைகிறார் என்ற உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிக அளவு கண் தானம் செய்த மாவட்டமாக நமது மாவட்டத்தை மாற்றுவதற்கு பெரிய அளவில் முயற்சி செய்ய வேண்டும். கண் தானம் விழிப்புணர்வு செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் என்னென்ன உதவி தேவைப்படுகிறது. அதை கேளுங்கள் அனைத்தையும் செய்கிறேன். மருத்துவர்களுக்கு தெரியும் என்ன நிகழ்வுகள் செய்தால் அதிக கண்தானம் பெற முடியும் என்று. இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுள்ள மருத்துவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் கண் நோய் சம்பந்தமாக வரக்கூடிய பல நபர்கள் வயதானவர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் நமது மாவட்டத்தில் எதாவது ஒரு குழந்தைக்கு உழபெநnவையட உயவயசயஉவ கண்டறியப்பட்டால் எவ்வளவு விரைவாக குழந்தை கண் புரை நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும். பிரசவ வார்டில் உள்ள செவிலியர்கள் அனைவருக்கும் இந்த நோயை கண்டுபிடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story