கிங் எப் செய்தி எதிரொலியாக கண்காணிப்பு கேமராவை சரி செய்த போலீஸார்

கிங் எப் செய்தி எதிரொலியாக கண்காணிப்பு கேமராவை சரி செய்த போலீஸார்
கிங் எப் செய்தி எதிரொலியாக கண்காணிப்பு கேமராவை சரி செய்த போலீஸார்
கிங் எப் செய்தி எதிரொலியாக கண்காணிப்பு கேமராவை சரி செய்த போலீஸார் சத்தியில் தரையை நோக்கி தொங்கும் கண்காணிப்பு கேமராவை சரி செய்ய வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக சரி செய்த போலீஸார் தினமலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்‌. சத்தியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காணும் வகையிலும், குற்றவாளிகள் தப்பி செல்வதை கண்காணிக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நகரின் மையப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா முறையாக பராமரிப்பு செய்யாததால் தரையை பார்த்து தொங்கியபடி இருந்ததை சுட்டி காட்டி சரி செய்ய வேண்டும் என செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று உடனடியாக போலீஸார் கேமராவை சரி செய்தனர்.
Next Story